ராமேஸ்வரம் நவ, 1
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் கோவிலில் தங்கத்தேர் கடந்த 12 ஆண்டுகளாக பயனின்றி இருந்தது இது சீரமைக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.