ஊட்டி ஆகஸ்ட், 5
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊட்டி நகர காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், காவல் ஆய்வாளர்கள் மணிக்குமார், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in