ராமநாதபுரம் அக், 30
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜைவிழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உடன் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் உள்ளனர்.