ராமநாதபுரம் அக், 28
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி தலைமையில், மாமன்னர் மருதுபாண்டியர்கள் 221-வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் வாலாந்தரவை கிராம மக்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த விழாவில் அதிமுக சார்பில் மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவசிலைக்கு மலர்த் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக பாரதி நகரில் மருது பாண்டியர்களின்ர் உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் முனியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக. அவைத்தலைவர் சாமிநாதன், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், சரவணகுமார், ஸ்டாலின், நகர் மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் அதிமுக. நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.