காஞ்சிபுரம் அக், 27
புதுமைப்பெண் திட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இதுவரை 2,3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.
தற்போது இந்த வலைத்தளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். 1 ம்தேதி முதல் 11ம்தேதி வரை இந்த வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1ம்தேதி முதல் 11 ம்தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.