திருப்பூர் அக், 26
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான காவல் துறையினர் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 காவல் துறையினர் ராமநாதபுரம் சென்றுள்ளனர்.