நாமக்கல் அக், 17
நாமக்கல் அருகே வினைதீர்த்தபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 3, 4 மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளன. அரசியல் கட்சியினர் மருந்து கிடங்குகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழகத்தில் 32 மருந்துக்கிடங்குகள் உள்ளன. இந்த ஆண்டு மேலும் தலா ரூ.6 கோடியில் 5 மருந்து கிடங்குகளை கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருந்து வினியோகத்தை சீராக மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார். மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்நிகழ்வின்போது அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட திமுக. செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் செந்தில், உட்பட பலர் உடனிருந்தனர்.