கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 4
சங்கராபுரம், பேரூராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி ஏரி நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, காவல்துறை துணை ஆய்வாளர் ராமசாமி, சிறப்பு துணை ஆய்வாளர் ராமர், வட்ட சார் ஆய்வாளர் ராதா, வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
#Vanakambharatham#Kallakurichi#lake#news