பெரம்பலூர் அக், 9
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
மேலும் நேற்று பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகில் நடத்தப்பட்டு வரும் முதியோர் காப்பகத்தையும், துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.