திருவண்ணாமலை அக், 6
வாணாபுரம் காவல் துணை ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் காவல்துறையினர் நூக்கம்பாடி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களை வாணாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது. அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா, அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, என்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.