Spread the love

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 3

திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக. நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், துணை தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும், தொழிலதிபருமான அக்பர் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய பாலத்தை திறந்து வைத்து பேசினார்.

மேலும் இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், புகழேந்தி சட்ட மன்ற உறுப்பினர் திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வக்கீல் தங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், துணை செயலாளர்கள் வெங்கடேசன், அவைத்தலைவர் சக்திசிவன், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், பிரபு, பிரகாஷ், ஒன்றிய பொருளாளர் ராஜசேகர், பேரூராட்சி துணைத் தலைவர் கஜிதாபிவி, வார்டு கவுன்சிலர்கள் குமார், அகமதுஷரீப், மோகன், சரவணன், ரமேஷ், தனுசு மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *