கோயம்புத்தூர் அக், 1
வடவள்ளி கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7 மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்தனர். தரவரிசை பட்டியல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன.
மேலும் மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலைக்கழக கவுன்சிலிங் நடைமுறை தொடங்கும். கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேரடியாக நடத்தப்படும். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கவுன்சிலிங் தொடர்பாக யூ-டியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் தனியார் வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.