கள்ளக்குறிச்சி செப், 29
கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி அரசு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்துகொண்டு ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் 117 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய திமுகசெயலாளர் அரவிந்தன், சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், மாவட்ட கவுன்சிலர் அகிலாபானு அருள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.