கீழக்கரை செப், 16
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைதெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவை நகராட்சி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மேலும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி அறக்கட்டளை சார்பாக 2021 – 2022 ஆண்டிற்க்கான அறிக்கையினை நஜீம் மரிக்கா வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகி கஜி, ரோட்டரி கிளப் கீழக்கரை தலைவர் கபீர் மற்றும் 4 வது வார்டு உறுப்பினர் சூரியகலா உடனிருந்தார்.