Spread the love

தர்மபுரி செப், 9

கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில், விஜய்’ஸ் ஏஸ் அகாடமி என்னும், ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு பயிற்சி மையம் செயல்படுகிறது.

தொடங்கிய முதல் ஆண்டிலேயே, ‘நீட்’ தேர்வில் தர்மபுரி, பென்னாகரம் மெயின் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சர்வேஷ், 720-க்கு, 635 மதிப்பெண் பெற்று, தர்மபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்வு எழுதிய, 90 பேரில், 81 பேர் தேர்ச்சி என, 90 சதவீத தேர்ச்சி பெற்று இம்மையம் சாதனை படைத்துள்ளது.

மேலும் மாணவர் சர்வேஷிற்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன், 7.50 லட்சம் மதிப்புள்ள காரை பரிசு வழங்கி பாராட்டினார். அதிக மதிப்பெண் பெற்ற நரேஷ், தனிஷ், தர்ஷனா, அமுதினி ஆகிய மாணவ, மாணவியருக்கும் பரிசு வழங்கினார்.
பள்ளி தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், முதன்மை செயல் அலுவலர் சந்திரபானு, விஜய்’ஸ் ஏஸ் அகாடமி தலைவர் கல்யாண் பாபு, விஜய் வித்யாலயா பள்ளி முதல்வர்கள் நாராயண மூர்த்தி, பத்மா, விஜய் மில்லினியம் பள்ளி முதன்மை முதல்வர் துரைராஜ், பள்ளி முதல்வர்கள் ஷீபா, ஜோதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *