கள்ளக்குறிச்சி செப், 5
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் beபன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, ஆட்சியர் ஷ்ரவன் குமார், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்