டாக்கா செப், 4
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கொரோனா பெருந்தொற்று விரைவாக பரவிய காலத்தில் நட்பு ரீதியிலான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வழங்கி பெரும் உதவிகளை செய்து இன்முகம் காட்டியது என கூறியுள்ளார். வேற்றுமைகள் இருப்பினும், அவற்றை பேச்சுவார்த்தை வழியே தீர்த்து கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளும் அதனையே செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது என அவர் வலியுறுத்தி பேசியுள்ளார்.
மேலும் வங்காளதேசம் மட்டுமின்றி, சில தெற்காசிய நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி, உண்மையில் மிக மிக உதவியாக பிரதமர் மோடி இருந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.