தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்க சென்றவர்களும் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத் துறையினர், காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்கின்றனர்.