கீழக்கரை செப், 18
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான சொறி நாய்களும் வெறி நாய்களும் பொதுமக்களை தினமும் கடித்து துன்புறுத்தி வருகின்றன.
இதைக் கட்டுப்படுத்தக்கோரியும் புதிய பேரூந்து நிலையம் செல்லும் சாலையை சீர்படுத்தக்கோரியும் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மக்கள் நல பாதுகாப்பு கழகம்,500 பிளாட் மக்கள் நலன் முன்னேற்ற சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
SDPI நகர் தலைவர் ஜலீல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் நல பாதுகாப்பு சங்க நிர்வாகி முகைதீன் இப்றாகீம் முன்னிலை வகித்தனர்.
பாரூக் ராஜா முகம்மது வரவேற்றார்,நகர் இணை செயலாளர் ஹமீது பைசல்,தமீமுதீன் கருத்துரை வழங்கினர்.
SDPI கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார்.500பிளாட் மக்கள் நல முன்னேற்ற சங்க தலைவர் செய்யது நியாஸ் நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.