துபாய் செப், 14
ஐக்கிய அரபு அமீரக துபாயில் நடைபெற்ற தமிழ் தொழில்முனைவோர் “தொழில்நெறிஞர்” சந்திப்பு ( Tamil Entrepreneurs Professionals Meet) விழாவில், தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டர் மாலிக் தீனார் *ஜமாத்தைச் சேர்ந்த *மஹீரா மகபீர் என்ற 11 வயது சிறுமி, உலக அரங்கில் தலைசிறந்த சாதனையாளராக திகழ்ந்துள்ளார்.
இந்த விழாவில், மூன்று குழு கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் ஒரு தனிப்பட்ட உலக சாதனையை வென்றதற்காக, மஹீரா மகபீரை துபாய் வாழும் அனைத்து தமிழ் மக்கள் மனதார பாராட்டி, மிக்க மகிழ்ச்சியுடன் கௌரவித்தனர்.
இத்தகைய இளம் வயதில் சாதனைகள் புரிந்து, தாய்தமிழின் பெருமையை உலகம் முழுவதும் விளங்கச்செய்த மஹீரா மகபீருக்கு வணக்கம் பாரதம் தேசிய தமிழ் வார இதழ் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ் தாயின் மங்கை மேலும் பல சாதனைகளை எட்ட, இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்கட்டும் என்று வாழ்த்துகிறோம்!
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.