ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் அல் குறைர் மாலில் உள்ள கீழ் தளத்தில் இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான தயிர் கொண்டு பல சுவைகளோடு உருவாக்கப்படும் இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான “Sour Sally” என்ற புதிய ஐஸ் கிரீம் கடை துபாயில் உள்ள முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கபட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியாவில் இருந்து டாஸ்டர் மற்றும் குடும்பத்தினர் மேலும் அமீரகத்தில் வசிக்கும் கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமீரக செயலாளர் பரக்கத் அலி உள்ளிட்ட பல பிரபல முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா மற்றும் ஸ்பிரேட் ஸ்மைல் குழுவினர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் ராகம் உணவகத்தின் நிறுவனர்கள் மஹாதிர் முஹம்மது, முஹம்மது கமாலுதீன், அம்ஜத் பாஷா அன்வர் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்று அனைவருக்கும் நன்றி கூறி கௌரவித்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.