தாய்லாந்து ஜூலை, 28
தாய்லாந்து – கம்போடியாவுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், தாய்லாந்து பயணத்தை தவிர்க்க ஏற்கனவே இந்திய தூதரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது உள்ள சூழலில் இந்த 8 நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடுகளின் விவரம்: ஏமன், கம்போடியா, மியான்மர், ஈராக், சிரியா, லிபியா, வங்கதேசம். உலகளாவிய மோதல்கள், அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம்.