கீழக்கரை ஜூலை, 20
ஒரே அணியில் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் வேலையை அந்தந்த பகுதி திமுகவினர் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவினர் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக போய் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்க்க வந்திருக்கோம். உங்கள் மொபைல் போன் நம்பர் சொல்லுங்க என்று கேட்டு வாங்கி இதற்கு உங்களுக்கு ஒரு OTP வரும் அதை சொன்னால் தான் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை உறுதி செய்யமுடியும்னு கூறி OTP நம்பரை வாங்கி விடுகின்றனர்.
இதன் மூலம் இவர்கள் திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாகி விட்டதாக மேலிட தலைமைக்கு கணக்கு காட்டி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த எவ்வித விழிப்புணர்வும் இல்லாத அப்பாவி பாமர மக்கள் திமுகவினர் கேட்டதும் OTP நம்பரை கொடுத்து விட்டு பரிதவிக்கின்றனர்.
பாஜக கட்சி மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்த்ததை போல திமுகவினர் OTP நம்பர் பெற்று உறுப்பினர் சேர்க்கை நடத்துவதாக பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்த பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது அவர்களை தொடர்பு கொண்டோம்.நமது அழைப்பை ஏற்கவில்லை.
இந்த விசயம் குறித்து திமுகவின் தலைமை தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகவல்:
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்