கீழக்கரை ஜூலை, 2
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் நாளிதழான முரசொலியில் கீழக்கரை நகரத்திற்கான மகளிர் அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அமைப்பாளராக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவின் சகோதரி நஸ்கத் ஹமீதாவும் துணை அமைப்பாளர்களாக 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கவுன்சிலர் டல்சியின் பெயரும் இடம் பெற்றதால் மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கடந்த நகர்மன்ற தேர்தலில் 15வது வார்டு திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் வேட்பாளரான டல்சி என்பவர்.இந்நிலையில் இவர் திமுகவின் மகளிர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட செய்தி முரசொலியில் வெளியானது குறித்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பலரும் கவுன்சிலர் டல்சியை தொடர்பு கொண்டு திமுகவில் இணைந்தது உண்மையா?என கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.நமது வணக்கம் பாரதம் இதழின் செய்தியாளரும் கவுன்சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது முரசொலி செய்திக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.
தாம் திமுகவில் இணையவில்லையென்றும் இன்னமும் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கவுன்சிலராகவே தொடர்வதாகவும் விளக்கமளித்தார்.இதுகுறித்த அவரது மறுப்பு ஆடியோ ஒன்று கீழக்கரையின் பல்வேறு சமூக வலை தளங்களிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
75 ஆண்டு கால அனுபவம் கொண்ட திமுகவின் நாளிதழான முரசொலியில் கட்சியிலேயே இல்லாத ஒரு நபர் மகளிர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டது இதுதான் முதல் தடவை மட்டுமல்ல,அடுத்த அமைப்பின் கவுன்சிலரை திமுக நிர்வாகியாக நியமித்ததும் இதுதான் முதல் தடவையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.