ஐக்கிய அரபு அமீரக துபாயயை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அல் நஜ்மா அல் ஃபரிதா சர்வதேச பெசிலிடீஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக அதன் ஊழியர்களை கௌரப்படுத்தும் விதமாக துபாய் சோனாபூர் பகுதியில் உள்ள அல் நஜ்மா பணியாளர்கள் விடுதி வளாகத்தில் மே தின உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி அல் நஜ்மா அல் ஃபரிதா சர்வதேச பெசிலிடீஸ் மேனேஜ்மெண்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் அபுல் கலாம் தலைமையில் தலைமை நிர்வாக அதிகாரி ஜமால் ஹாஜா குழு உறுப்பினர்கள் நசுருதீன், அஹமத் ஜலால், முஜாஹிதீன் மற்றும் இயக்குனர் அபுதாஹிர் முன்னிலையில் சுவேதா மற்றும் ஆர்ஜே மாயா தொகுத்து வழங்க ஊழியர்களின் தனித்திறமைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளோடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக துபாய் காவல்துறையில் இருந்து, கேப்டன் காலித், சார்ஜென்ட் அதிகாரி யூசுப் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அயூப், அல் வாஸல் காலித், துபாய் தமிழ் பெண்கள் சங்க பொதுச்செயலாளர் சானியோ மற்றும் தினக்குரல் தேசிய நாளிதழ் வளைகுடா நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.