கள்ளக்குறிச்சி செப், 2
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 105 மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ், மனநல மருத்துவர் பிரவீனா ஆகியோர் கலந்துகெண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர்.
இதில், 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற தகுதி உடையவர்களாவர். அதன்படி, 101 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டது.