குவைத் ஜன, 1
வளைகுடா அரபு தேசமான குவைத்தில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான உலக தமிழர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் மனிதநேயர், இந்தியாவின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட, இந்தியாவில் எங்கே இயற்கை சீற்றம் என்றாலும் ஓடோடி உதவக்கூடிய, மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தேமுதிக குவைத்பிரிவு சார்பாக குவைத் சிட்டி மிர்காப் பாலிவுட் ஹோட்டலில் அவைத்தலைவர் ரபீக்ராஜா தலைமையில், செயலாளர் மாலிக் அன்சாரி, பொருளாளர் ஏ.டி.முருகன், முன்னாள் அவைத்தலைவர் புதுகை ஜின்னா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கழக துணைசெயலாளர்கள் சபியுல்லாஹ், பழனி, செந்தில், பெரியார், மற்றும் கேப்டன் மன்ற செயலாளர் நவ்வர்உசேன், இளைஞர்அணி செயலாளர் முகம்மதுதாரிக், மூத்த நிர்வாகி கும்பகோணம் பஷீர்அகமது, மற்றும் அகமதுசெரீப், அன்புராஜா, ராஜேஷ், கருணாகரன், சுப்ரமணி, பாலாஜி, சுரேஷ், பத்மநாபன், விஜயகாந்த், பாண்டி ஆகியோர் கலந்துக்கொண்டு மறைந்த கேப்டன் விஜகாந்த்திற்கு மரியாதை செலுத்தினர்,
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக அதிமுக, திமுக, விசிக, பாமக, மஜக தவாக தமிழ் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மறைந்த மாமனிதர் கேப்டன் அவர்கள் உதவியது போல் ஒவ்வொரு தமிழனும் உதவினால் நாட்டில் ஏழைகளோ பசியாளிகளோ இல்லை என்கிற நிலை வரும் என்றும் ஒவ்வொரும் கேப்டனை போல் நல்ல மனிதராக வாழ முயற்சிப்போம் என்று புகழ் அஞ்சலி செலுத்தினர்,
வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து கழக பொருளாளர் ஏ.டி. முருகன் நன்றியுரை ஆற்றினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.