சென்னை அக், 15
கனமழை எதிரொலியாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1300 டன் தக்காளி வருவது வழக்கம். ஆனால் மழை காரணமாக வரத்து 800-டன் ஆக குறைந்துள்ளது.