நாகை,16
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும் 27 பிரிமியர் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒரு வழி பயணத்திற்கு பிரீமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டி உடன் 7500ரூபாய், சாதா இருக்கைக்கு 5000 ரூபாய் கட்டடணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.