Spread the love

ஜூலை, 24

கிவி பழம் செரிமான ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரை நிறைய வேலைகளை செய்கிறது. இந்த கிவி பழத்தை உங்க உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் நல்லபடியாக செரிமானம் நடக்கும்.

எல்லா சீசன்களிலும் கிடைக்கக் கூடிய பழம். நவம்பர் முதல் மே வரை, கலிபோர்னியாவில் பயிரிடப்படுகிறது, ஜூன் முதல் அக்டோபர் வரை, அவை நியூசிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பழம் 50 விதமான வகைகளில் கிடைக்கிறது. கிவி பழத்தின் முழு பலனும் மாத்திரை வடிவில் கூட கிடைக்கின்றன.

கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகவும் பெரியது. இது முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கிறது. இந்த பழுப்பு நிற பழம் இனிப்பு சுவையுடன் புளிப்பை அளிக்கக் கூடியது. இந்த பழத்தில் விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றின் சதைப்பகுதி மற்றும் சிறிய கருப்பு விதைகளை உண்ணலாம். இந்த பழத்தை ஆண்டு முழுவதும் வாங்கி சாப்பிடலாம்.

கிவி பழம் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இந்த பழம் இரத்த கொழுப்புகளால் ஏற்படும் தீங்கை தடுக்கிறது. குறிப்பாக இதய பிரச்சினையை தடுக்க அஸ்பிரின் மாத்திரைகள் வழங்கப்படும். இருப்பினும் அஸ்பிரின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருவது வீக்கம் மற்றும் புண்களை தூண்டும். ஆராய்ச்சியின் படி ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கிவி பழங்களை சாப்பிடுவது இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கிவியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். கிவியில் நார்ச்சத்துக்களை தவிர கிவி ஆக்டினிடின் என்ற நொதியைக் கொண்டுள்ளது. இது வயிற்றில் உள்ள புரதங்களை திறம்பட உடைக்க உதவுகிறது. எனவே அதிக உணவிற்கு பிறகு சீரண சக்திக்காக கிவியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது இறைச்சி மற்றும் மீன்களில் இருந்து பிடிவாதமான புரதங்களை நீக்குகிறது. கிவி மலமிளக்கி பண்பை கொண்டுள்ளது. எனவே இது மலம் லேசாக வெளியேற உதவுகிறது.

பார்வை திறனை பாதுகாக்கிறது :

கிவி கண்களை மாகுலார் சிதைவில் இருந்து காக்கிறது. ஆராய்ச்சியின் படி தினமும் 3 வேளையும் கிவி போன்ற பழங்களை உட்கொள்வது கண் பார்வை சிதைவை 36% ஆக குறைக்கிறது. கிவியில் காணப்படும் அதிக அளவு ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் இதில் சிறந்த பங்காற்றுகிறது.

டி. என். ஏ குறைப்பாட்டை சரி செய்கிறது :

கிவி பழம் டி. என். ஏ குறைப்பாட்டை சரி செய்கிறது. கிவி சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான புற்றுநோய் சிகிச்சை முறைக்கு கிவி ஒரு சிறந்த உணவாக அமைகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது :

கிவி இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்கிறது. கிவி பற்றிய 2014 ஆம் ஆண்டு ஆய்வில், 8 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 3 கிவி சாப்பிடுவதால், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். கிவியில் லுடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்பை கொண்டுள்ளது. கிவியில் காணப்படும் விட்டமின் சியும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *