கீழக்கரை ஜூலை, 10
கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்து உள்ளது. கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் வரைக்கும் பள்ளங்கள் நிறைந்த சாலையாகவே உள்ளன.
திருச்செந்தூரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையும் இதுதான்.குண்டும் குழியுமான இந்த சாலையால் அவ்வப்போது வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன.
இந்த சாலை வழியாகத்தான் கடந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றனர்.
தேர்தல் நேரத்தில் வாக்குகளை அள்ளி செல்லும் ஊர்களை கண்டு கொண்ட அரசியல்வாதிகள் சேதமடைந்து உயிர் பலி வாங்க காத்திருக்கும் சாலையை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? என்பதே பொதுமக்களின் கேள்வியாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
கீழக்கரை.