ஈரோடு ஆக, 29
தொடர்மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது. காய்கறிகள் ஈரோடு வ. உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கி உள்ளது. ஈரோடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக 15 டன் முதல் 18 டன் வரை காய்கறிகள் வரத்தாகும். ஆனால் நேற்று 12 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. விலை உயர்வு இதன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.