இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக குப்பைகள் எடுக்கப்படாததால் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன.
கீழக்கரையின் பிரதான சாலைகளில் ஒன்றான முஸ்லிம் பஜார் பகுதியில் முக்கியமான வங்கிகள் உள்ளன.இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலிலேயே குப்பை எடுக்கப்படாமல் மலைபோல் தேங்கி நாற்றம் வீசுகிறது.
வங்கிகளுக்கு வந்து செல்லும் மக்கள் மூக்கை பிடித்து செல்கின்றனர்.கீழக்கரை நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு என்னாயிற்று? ஏன் குப்பைகள் எடுக்கப்படவில்லை? என்பது புரியாத புதிராக உள்ளது.
இனியும் தாமதிக்காமல் குப்பை மலைகளை உடைத்து அப்புறப்படுத்தாவிடில் சுகாதார சீர்கேட்டினால் பல்வேறு நோய் தாக்கம் ஏற்படலாம்? என்பதை கவனத்தில் கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டுமென்கின்றனர் அப்பகுதி வியாபாரிகள்.
தகவல்
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்