Spread the love

துபாய் ஜூன், 18

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா தனியார் பள்ளியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து எந்தவித ஓய்வெடுக்காமல் அமீரகத்தில் வசிக்கும் 5 மாணவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை வெவேறுவிதமாக சுற்றும் போட்டி நடைபெற்றது. இதனை துபாய் ஈசன் சிலம்பாலையா மாஸ்டர் பிரகதீஸ்வரன், பாலாஜி, கலைவாணி பாலாஜி ஆகியோர் ஒருங்கிணைப்பில் அனு சௌந்தர் தொகுத்து வழங்க இந்திய உலக சாதனை புத்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சதாம் ஹுசைன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாஸ்டர் பிரகதீஸ்வரன், பிரனீத், அவிநாஸ், கவின் கணேஷ், லக்ஷிதாஸ்ரீ ஆகிய மாணவர்கள் கலந்துகொண்டு இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக் Spread Smiles’s ஈவென்ட் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, தினகுரல் நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, அமீரக திமுக பேச்சாளர் திருநாவுக்கரசு, ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சாதனையாளர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் அளித்து கௌரவித்தனர்.

வெற்றிபெற்ற சாதனையாளர்களுக்கு புதுகை டிவி மற்றும் தமிழககுரல் டிவி வளைகுடா நெறியாளர் கமால் கேவிஎல் வாழ்த்துக்களை கூறினார்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *