கீழக்கரை ஆக, 28
முத்தூட், பொதுமக்களின் தேவைகளை அறிந்து நகைக் கடன் வழங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 4200 கிளைகளுடன் மிகப்பிரமாண்டமாக வலம் வருகிறது முத்தூட்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்தூட் புதிய கட்டிடமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் வள்ளல் சீதக்காதி சாலை பிள்ளையார் கோவில் எதிர்புறத்தில் இந்த புதிய கட்டிடம் நாளை காலை 9:30 மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய கிளை அலுவலகத்தை திருவனந்தபுரம் முத்தூட் சேர்மன், ஜார்ஜ் ஜேக்கப் முத்தூட் திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.
மேலும் மண்டல மேலாளர் ஸ்ரீகாந்த் வரவேற்புரை ஆற்ற உள்ளார் சிவகங்கை பிரிவு மேலாளர் ரஞ்சித் குமார் சிறப்புரை ஆற்ற மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் குத்துவிளக்கு ஏற்ற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அஇஅதிமுக நகர்மன்ற துணைத் தலைவர் முகமது உசேன், கீழக்கரை காவல் ஆய்வாளர் பால முரளி சுந்தரம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தலைவர் பழனி குமார் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சிவனேசசெல்வம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.