கோயம்புத்தூர் ஆக, 27
பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறது. கல்லூரியில் நடைபெற்ற இந்த பவள விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் நிர்வாக அறக்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். மேலும் நலிவடைந்த பானை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் 75 ஆயிரம் பானைகளை வழங்க செய்து பி.எஸ்.ஜி கலை கல்லூரி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழை உலக சாதனை அமைப்பின் நடுவர் முதல்வரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கல்லூரி முதல்வர் பிருந்தா, துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.