Spread the love

மே, 13

சேப்பங்கிழங்கின் முழு செடியும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கிழங்கின் செடி மெல்லிய தண்டினையும் அடியில் கிழங்குகளையும் கொண்டிருக்கும்.

இதன் கிழங்கு மட்டுமல்ல தண்டு மற்றும் இலையையும்கூட சமைத்துச் சாப்பிடலாம். புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடக்கூடாது. புளிக்குழம்பு வைப்பவர்கள் இந்த தண்டினை அதனுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இலையில் டோக்ளா செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும்.

சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடல் புண்கள் விரைவில் குணமாகும். நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது. சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணமாக்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ஏ மற்றும் இ சருமத்தினைப் பாதுகாக்க உதவுகிறது.

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்தச் செடியை வீடுகளில் மிக எளிதாக வளர்க்கலாம். கடைகளில் விற்கும் சேப்பங்கிழங்கை வாங்கி வந்து மண்ணில் புதைத்துவைத்தால் மிக எளிதாக வளரும். இதன் இலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடாது என்பதால் வீட்டின் வெளிப்புறங்களில் சேப்பங்கிழங்கை நட்டு வளர்க்கலாம். இதன் இலைகள் பரந்து விரிந்து வளரும் என்பதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

சேப்பங்கிழங்கை வீட்டின் வெளிப்புறம் மட்டுமல்லாமல் குளியலறை மற்றும் சமையலறையிலிருந்து நீர் வெளியேறும் இடங்களில் நட்டு வைக்கலாம். இப்படி நட்டு வைத்தால் அந்த கழிவுநீரில் கலந்திருக்கும் சோப்பு உள்ளிட்ட ரசாயனக்கலவைகளை உள்ளிழுத்துக் கொண்டு நீரை சுத்திகரித்துவிடும். ஆகவே, கழிவுநீர் வெளியேறும் இடங்களில் சேப்பங்கிழங்கை நட்டு பலன் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *