கீழக்கரை ஆகஸ்ட், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி மெயின் ரோடு ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை ரோடு வரை உள்ள சாலைகளில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது.
புதிதாக சாலை அமைக்கும் பணியாக இருந்தாலும் அரசு துறை சார்ந்த நிர்வாகத்தினர் சாலையினை தோண்டி பழுது பார்த்தாலும் நெடுஞ்சாலை துறையின் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் சாலையோர கடைக்காரர்களால் அதிக அளவில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இன்று கீழக்கரை நகர் மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
எவ்வித பாரபட்சமும் இன்றி நடந்த இப்பணியில் வருவாய்த்துறை நெடுஞ்சாலை துறை நகராட்சி நிர்வாகம் காவல்துறை மின்வாரியம் உட்பட அனைத்து பிரிவினரும் சிறந்த முறையில் பணியாற்றினார்கள் என பொதுமக்கள் கூறினார்கள்.