கீழக்கரை மே, 11
நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கீழக்கரை மாணவிகளிடையே குதூகலத்தை உண்டாக்கியது.
கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
167க்கு 167 என்ற இமாலய என்ணிக்கையில் 100% தேர்ச்சி பெற்ற ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி!
ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி முகம்மது அல் அசீலா அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100/100 மதிப்பெண்களும் கணிதத்தில் 99/100 மதிப்பெண்கள் என 492/500 பெற்று கீழக்கரையிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மற்றொரு மாணவி செய்யது ரிஃபா கணிதத்தில் 100/100 மார்க் எடுத்து 489/500 மதிப்பெண்களோடு கீழக்கரையில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.
480 மதிப்பெண் பெற்ற மாணவி செய்யது ஹமீது நிஷா பள்ளியில் மூன்றாமிடத்தை பிடித்தார். இப்பள்ளியின் மாணவிகளான ஹர்ஷினி,மகேஸ்வரி ஆகியோர் கணிதத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
400 க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் 69 பேர்.450 க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் 18 பேர் என மிகப்பெரிய சாதனையை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி புரிந்துள்ளது பெற்றோர்கள், மாணவிகளிடையே பெரும் வரவேற்பினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
UHMS தலைவர் முஜீப் காக்கா,பள்ளி தாளாளர் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர்,முன்னாள் தாளாளர் அக்பர் அலி,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE உமர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலரும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மாணவிகளின் வெற்றிக்காக பாடுபட்ட பள்ளி தலைமையாசிரியை ஜாக்குலின் லதா பெஸ்டஸ் மற்றும் அனைத்து ஆசிரியைகளுக்கும் பாராட்டினை தெரிவித்தனர்.
100/100 தேர்ச்சி பெற்ற ஹமீதியா மெட்ரிக் பள்ளி!
தேர்வு எழுதிய 27/27 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதோடு 474/500 மதிப்பெண் பெற்ற மாணவி அல்சமானா பள்ளியில் முதலிடம் பிடித்தார். ஆண்டோ ஜெனிபா 473/500 மதிப்பெண் பெற்று பள்ளியின் இரண்டாமிடத்தையும், செய்யது சகுபான் மரியம் 467/500 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தார்.
6 மாணவிகள் 450க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாஜித் சதக் வாழ்த்து தெரிவித்தார்.
ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி!
தேர்வு எழுதிய 95 மாணவர்களில் 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 475/500 மதிப்பெண் பெற்ற மாணவர் சுதீர்வேல் கணிதத்தில் 100/100 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார்.461/500 மதிப்பெண் பெற்ற திவாசன் பள்ளியின் இரண்டாமிடத்தையும் 457/500 மதிப்பெண் பெற்ற யாழ் ஜெகபிரியன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அனீஸ் அகமது மற்றும் தலைமையாசிரியர் ஜவஹர்பாரூக் வாழ்த்தி பாராட்டினர்.
ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி!
தேர்வு எழுதிய 121 மாணவர்களில் 119 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.472/500 மதிப்பெண் பெற்ற மாணவி ஆய்ஷத்து ரிபா பள்ளியில் முதலிடம் பிடித்தார். ஹனா பர்ஹா,கார்த்திகா லட்சுமி ஆகியோர் 470/470 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.469/500 மதிப்பெண் எடுத்த ஹாரூன் ஹம்னா பள்ளியில் மூன்றாமிடத்தை பிடித்ததோடு அறிவியலில் 100/100 சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்,மாணவிகளை பள்ளி தாளாளர் முகம்மது சுஐபு தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வாழ்த்தினர்.
இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி!
176 பேர் தேர்வெழுதி 174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.480/500 மதிப்பெண் பெற்ற மாணவி எஸ்தர் ஏஞ்சலின் கணிதத்தில் 100/100 சதமடித்து சாதனை புரிந்ததோடு பள்ளியின் முதலிடத்தையும் பிடித்தார்.
474/500 மதிப்பெண் பெற்ற மாணவர் முகம்மது பஃதீன் மற்றும் மாணவி சம்சு பஸீஹா பள்ளியின் இரண்டாமிடத்தை பிடித்ததோடு மாணவி சம்சு பஸீஹா கணிதத்தில் 100/100 சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.473/500 மதிப்பெண் பெற்ற மாணவி ஆமிலா மூன்றாமிடத்தை பிடித்தார். மாணவர் அப்துல்முபீத் கணிதத்தில் சதமடித்து சாதித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்,மாணவிகளை பள்ளி தாளாளர் MMK முகைதீன் இப்றாகீம்,தலைமையாசிரியை மேபில் ஜஸ்டஸ் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி!
46 பேர் தேர்வெழுதி 41 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 477/500 மதிப்பெண் பெற்ற மாணவி பாத்திமா சல்ஹா மற்றும் ஹதீஜத்து நிஃப்லா ஆகியோர் பள்ளியில் முதலிடத்தை பிடித்தனர்.466/500 மதிபெண் பெற்ற கீர்த்தனா இரண்டாமிடத்தையும் 460/500 மதிப்பெண் பெற்ற ஆசியா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
அல்பய்யினா மெட்ரிக் பள்ளி!
தேர்வு எழுதிய 17 பேரும் வெற்றி பெற்று 100% தேர்ச்சி பெற்றனர்.
484/500 மதிப்பெண் பெற்ற மாணவி பர்ஹீன் நப்ஹா பள்ளியின் முதலிடத்தையும் கீழக்கரையில் நான்காமிடத்தையும் பிடித்ததோடு கணிதத்தில் 100/100 சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.
453/500 மதிப்பெண்ணோடு மாணவி மர்யம் லஃப்ரா பள்ளியின் இரண்டாமிடத்தையும் 436/500 மதிப்பெண் எடுத்த மாணவி ஹசீனத் ரைஹானா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ஜாபிர் சுலைமான்,பிரின்சிபல் ஜெபா சௌபாக்ய ராணி,நிர்வாக அதிகாரி ஹமீது பைசல் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள அனைத்து மாணவர்,மாணவிகளுக்கும் இம்பாலா MH சுல்தான் செய்யது இப்றாகீம் அறக்கட்டளை நிறுவனர் இம்பாலா சுல்தான்,மாவட்ட அரசு காஜி மௌலானா,மௌலவி VVA சலாஹுதீன் ஆலிம்,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE உமர்,நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, SDPI கட்சி நகர்மன்ற உறுப்பினர் சக்கினா பேகம் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி பாராட்டியுள்ளனர்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்