கீழக்கரை ஏப்ரல், 26
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான கட்டணம் ரூ.42,900 த்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு தேவிபட்டிணம் மின் உதவி பொறியார் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் AEக்கு ரூ.3000/-மும் Labourக்கு கொடுக்க ரூ.6000/-மும் தனியாக கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முகமது பிலால் இன்று மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9,000/- கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில்
புகார் செய்ததை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊலஞ்ச ஒழிப்பு துறை போலிஸாரின் அறிவுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய ரூ.9,000/-த்தை வணிக ஆய்வாளரிடம் கொடுத்த போது அதில் ரூ.3000/- பெற்றுக்கொண்டு மீதி ரூ.6000/- அங்கு பணிபுரியும் வயர்மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.
அதன்படி இருவரும் இரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு போலிஸார் கையும் களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் மேற்படி சம்பவத்தில் அவ்வலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்