கீழக்கரை ஆக, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட (வள்ளல் சீதக்காளி சாலை) ஏர்வாடி முக்குரோடு முதல் கடற்கரை பழைய பேருந்து நிலையம் வரை பல்வேறு கனரக வாகனம் மற்றும் தினசரி கீழக்கரை மற்றும் சென்னை செல்வதற்கு தனியார் சொகுசு பேருந்துகள் வருவதன் மூலம் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுவதால் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனம் வருவதற்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் அப்போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் காவலர் ஒருவரை நியமிப்பது குறித்தும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுப் போன்ற தவறான செயல்கள் நடைபெறாத வகையில் இரவு நேரங்களில் காவலர்களை அமர்த்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் அபிதா மற்றும் நகராட்சி ஆணையர் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.