புதுடெல்லி ஜன, 19
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி கடுமையாக விரதம் இருந்து வருகிறார். இதற்காக பிரதமர் தரையில் படுத்து தூங்குவதாகவும், தேங்காய் தண்ணீர் மட்டும் குடிப்பதாகவும், சூரிய உதயத்திற்கு முன் எழுவதாகவும், யோகா, தியானத்தை கடைப்பிடிப்பதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த 12ஆம் தேதி விரதத்தை துவங்கிய அவர் 22ஆம் தேதி வரை 11 நாட்கள் கடைபிடிக்க உள்ளார்.