Spread the love

ஜன, 3

தமிழில் ‘சிவப்பு பீன்ஸ்’ என்று அழைக்கப்படுவதுதான் இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைக்கபடுகிறது. இது ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஏனெனில் இது காராமணி போன்றே இருக்கும், ஆனால் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

நம் இளம்பருவத்தில் இருக்கும்போது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயதான காலத்திலும் நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ராஜ்மாவில் அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் அளவு கொண்ட ராஜ்மாவில்

புரதம் – 22.9 கிராம்

கொழுப்பு – 1.3 கிராம்

தாதுக்கள் – 3.2 கிராம்

நார்ச்சத்து – 4.8 கிராம்

மாவுப் பொருள் – 60.6 கிராம்

கார்போஹைட்ரேட் – 346 கி.கலோரிகள்

கால்சியம் – 260 மில்லிகிராம்

பாஸ்பரஸ் – 410 மி.கி.

இரும்புச்சத்து – 5.1 மி.கி.

ஆகியவை அடங்கியுள்ளது. இதில் சோடியமும் பொட்டாசியமும் அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் எல்லா விதமான முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன.

இதில் கால்சியம், இரும்புச்சத்து குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் தேய்மானம் அடையும் நிலையைத் தடுக்க அடிக்கடி உபயோகிக்கலாம்.

ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும், கொலஸ்ட்ராலை குறைக்கும், நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ராஜ்மா சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதன்மூலம் நம் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்தானது பெருங்குடலில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும்.

மூளையின் நரம்பு மண்டலங்கள் திறமையாக செயல்பட ‘வைட்டமின் கே’ அவசியம். ராஜ்மாவில் வைட்டமின் ‘கே’ அதிக அளவு நிறைந்துள்ளது. ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

ராஜ்மாவில் ‘வைட்டமின் B6’ அதிகமாக உள்ளது. இது நம் உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். இதை சாப்பிட்டு வரும்போது நம் சருமம் ஆரோக்கியத்தைப் பெற்று பளபளப்பாக மாறும். இதனால் வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படாது.

ராஜ்மாவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் புரதம், இரும்பு, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். மேலும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஃபோலிக் அமிலம் இந்த ராஜ்மாவின் மூலம் கிடைக்கிறது.

ஆரம்ப நிலை புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் நம் உடம்பில் அதிகமாகாமல் தடுக்கலாம். இதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இந்த மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.

ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *