கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 23
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களிடமிருந்து 49 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 336 மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
பின்னர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் நீரில் மூழ்கி பலியான சங்கராபுரம் தாலுகா மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் கவுதம், மணி மகன் தீபக், சங்கராபுரம் தாலுகா தும்பை கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர் ஹஜிதா பேகம், உதவி ஆணையர் ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.