கீழக்கரை டிச, 20
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் காயல்பட்டினம் போன்ற ஊர்களுக்கும், கீழக்கரை நகராட்சி சார்பாக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் நேரடியாக மக்களுக்கு சென்றடைய தனி வாகனம் மூலம் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் ஆணையர் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.