Spread the love

டிச, 12

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இயற்கையான முறையில் தயாரித்து குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.

துளசி இலை தேநீர்:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர்ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம் பூ தேநீர்:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ தேநீர்:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி தேநீர்:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை தேநீர்:

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை தேநீர்:

கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை தேநீர்:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை தேநீர் தயார்.இ ந்த டீ வகைகளை தயாரிக்க, தேநீர் வாசம் வேண்டும் என்றால் சிறிது தேநீர் துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை சேர்ப்பது தான் மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *