கீழக்கரை டிச, 12
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதுகிழக்குத்தெரு பழைய குப்பை கிடங்கு இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது.
குழியில் இருந்து எடுக்கப்படும் மணல்கள் டிராக்டர்களில் ஏற்றப்படுவதை போன்ற காணொளிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. மணல்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறது? என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.
திடீரென ஜேசிபி இயந்திரம் கொண்டு மணல் அள்ளப்படும் நிலையறிய சம்பந்தப்பட்ட வார்டுகளின் கவன்சிலர்களிடம் சமூக ஆர்வலர்கள் தொடர்பு கொண்ட போது, கீழக்கரையில் என்ன நடக்கிறது? அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு கூட சொல்லாமல் திடீரென திட்டப்பணிகளை மேற்கொள்வதால் அதுகுறித்த மக்களின் ஐயங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை என பெரும்பாலான கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து 8 வது வார்டு கவுன்சிலர் MMK.காசிம் கூறியதாவது:
“எந்தவொரு திட்டப்பணியானாலும் அதை உரிய வார்டு கவுன்சிலருக்கு தெரியப்படுத்த வேண்டுமென ஏற்கனவே ஆணையரிடம் நாங்கள் கூறியிருந்தும் இந்த விசயத்தில் அதன் மரபு மீறப்பட்டிருப்பதில் ஏதோ உள்குத்து இருப்பதாக உணர்கிறேன்” என்றார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலருக்கு மதிப்பு இல்லை என மனம் குமுறியுள்ளார்.
மேலும் என்னதான் நடக்கிறது நகராட்சி நிர்வாகத்தில்? என்ற புரியாத புதிருக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி தலைவரும் தான் பதிலளிக்க வேண்டுமென்கின்றனர் பொதுமக்கள்.
ஜஹாங்கீர் அரூஸி.
மாவட்ட நிருபர்.