Spread the love

டிச, 8

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

மேலும் வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.

உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *