ராமநாதபுரம் நவ, 7
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஜும்மா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் மாவட்ட திமுக செயலக அணி தலைவர் ஹனிபா அவரது மனைவி வழக்கறிஞர் நாதியா ஹனிபா இவர்களால் நாளை மாலை புதிய சட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
இந்த திறப்பு விழாவில் கீழக்கரை நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் தலைமை வகிக்க உள்ளார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்குமார் (government of india, C G C Madurai)தலைமையில் அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
இந்நிகழ்விற்கு ஊர் முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து புதிய சட்ட அலுவலகம் பொதுமக்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி புரியும் நோக்குடன் இந்த அலுவலகம் செயல்பட உள்ளது