கீழக்கரை செப், 7
ராமநாதபுரம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து இன்று(07.09.2023) காலை 10.30 மணிக்கு ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேலை கொடு, விலையை குறை, மதவாத அரசியலை கைவிடு,மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தாதே போன்ற கோஷங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் சந்தானம், தாலுகா செயலாளர் மகாலிங்கம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தாலுகா செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாகினர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை